Monday, June 11, 2012

தலைகால் புரியாமல்

"வேண்டாம், தயவு செஞ்சு என்னய மன்னிச்சு விட்டுருடா" என்று அவன் கதறினான்.
"மன்னிச்சு விடவா உன்ன இங்க வரவெச்சேன், ம்ஹும், உன்ன விட மாட்டேன்" என்றவாறே அருவாளுடன் அவனை நெருங்கினான்.
'உன் கால பிடிச்சு கேட்டுக்கிறேன், என்னய விட்டுருடா" என மறுபடியும் கதறினான்.
"என்ன கால்ல விழுகறியா, ஹா.. ஹா... ஹா... ஏண்டா சாதி வெறில நீங்க என் அண்ணனுக்கு பண்னினதுக்கு வட்டி தரனும்ல, வெட்டின கால்ல விழுகுறேங்குறியா"



"வேண்டாம்டா, விட்டுறுடா!!???"
"எங்க அண்ணனுக்கு நடந்தது இங்க உனக்கு நடக்க போகுது, இனி நீ நடமாடவே முடியாதுடா" என்றவாறே அருவாளை ஓங்கினான்.
அலறி முடிவதற்குள் அவனது தலை தரையில் விழுந்தது.
இரண்டொரு வாரங்களுக்கு முன் சாதி வெறியால் தன் அண்ணனை கொன்று, தனது காலையும் வெட்டியவனை பழிவாங்கிய மகிழ்ச்சியில் அந்த தலையை தூக்கினான்.
மெதுவாக நொண்டியபடியே காவல் நிலயத்தை நோக்கி நகரத்தொடங்கினான் சிரித்துக்கொண்டே.....

No comments:

Post a Comment