வகுப்பறை ஆசிரியர் நுழைந்தவுடன் வழக்கம்போல அமைதியானது.
ஆசிரியர், "இன்னிக்கு Class Test சொல்லியிருதேனே, எல்லோரும்
படிச்சிடிங்களா?" என்றார். வகுப்பறை சிறிது நேரம் அமைதியாக இருந்தது. உடனே
ஆசிரியர், "சரி, யாரெல்லாம் படிக்கலயோ, அவங்கல்லாம் எழுந்து நில்லுங்க"
என்றார். பயந்தபடியே சில மாணவர்கள் எழுந்து நின்றனர்.
உடனே ஆசிரியர் கோபத்தில், "நம்ம ராஜாவைப்பாருங்க, அவன் எப்போதும் நல்லா படிக்கறான்ல, உங்களுக்கு மட்டும் என்னவாம், இன்னக்கி பூரா இப்படியே நில்லுங்க" என்றவர், "இன்னிக்கு Class Test இல்ல, கூட்டாண்மை பாடம் நடத்தப்போறேன். கவனத்த சிதறவிடாம பாடத்த கவனியுங்க", என்றார்.
பாடத்தில் ஒரு பகுதியை ஆசிரியர் விளக்கிக்கொண்டிருந்தார். அப்போது அவர், "இப்போ ஒரு நிறுவனத்தில் ஒரு தொழிலாளி நல்லா வேலை செய்யறார், இன்னொருவர் அவரைவிட கொஞ்சம் மந்தமா வேலை செய்யுறார். அதனால நல்லா வேலை செஞ்சவரை பாராட்டிட்டு, அவர் முன்னாடியே, வேலைல தவறு செஞ்சவரை திட்டக்கூடாது. அப்படி திட்டினா அதுவே அவரது கவனச்சிதறலுக்கு ஆளாக்கிடும், மேலும் தவறுகளுக்கும் வழிவகுக்கும்" என்று கூரியவருக்கு ஏதோ தட்டுப்பட்டு முகத்திலறைந்தாற்போல இருந்தது. உடனே அவர் நின்று கொண்டிருந்த மாணவர்களைப்பார்த்து, "சரி பசங்களா, நின்னது போதும் உட்காருங்க. இனிமே நல்லா படிச்சிட்டு வாங்க, சரியா!!" என்றார்.
மாணவர்களும் சந்தோஷமாக தலையாட்டிவிட்டு அமர்ந்தனர். ஆசிரியர் தன் பாடத்தை தொடர்ந்தார்.

No comments:
Post a Comment