Monday, February 27, 2012

முரண்பாடு


 லாட்டரிச்சீட்டு தடை செய்யப்பட்டு ஒரு மாதமாகிவிட்டது. அன்று காலை நான் வழக்கம்போல ஜாக்கிங் சென்றுகொண்டிருந்தேன். வரும் வழியில் என் நண்பன் ராமு. "டேய்!!, பார்த்து ரொம்ப நாளாச்சே எப்படிடா இருக்க !!" என்றவன், "நம்ம மோகன் வீட்ல இருக்கறவங்க இப்பதாண்டா ரொம்ப சந்தோஷமா இருக்காங்க" என்றான்.
"ஏண்டா!, என்ன விஷயம்!!" என்றேன். ராமு, "மோகனுக்கு ஒரு கெட்ட பழக்கமும் இல்ல, ஆனா சரியான லாட்டரிச்சீட்டு பைத்தியம், வர்ற காசு பாதியும் லாட்டரிச்சீட்டு வாங்கியே செலவு செய்யுறவன். இப்ப லாட்டரி சீட்டை தடை செஞ்சதால பணம் சரியா வீடு போய் சேருது" என்றான்.
அப்படியே பேசிக்கொண்டே நடந்து சென்று கொண்டிருந்தோம். சற்று தொலைவில் ஒரு சிறிய கும்பல். கூட்டத்திற்கிடையே சென்று, "என்ன ஆச்சு!!" என்றேன். கூட்டத்தில் ஒருவர், "லாட்டரி சீட்டு வித்து பொழச்சுகிட்டு இருந்தான். இப்பதான் லாட்டரி சீட்ட தடை பண்னிட்டாங்கல்ல.... அதான் வேற தொழில் செய்யத் தெரியாம தற்கொலை செஞ்சுகிட்டான்" என்றார்.
வாழ்கையில் எத்துனை முரண்பாடுகள் என எண்னியபடியே என் நண்பனுடன் நடையை தொடர்ந்தேன்.

No comments:

Post a Comment