Monday, February 27, 2012

கோபம்

உலகமே அவனை பாராட்டியது. இந்திய நட்டிற்குள் அவன் அடியெடுத்து வைத்தபோது அவனுக்கு ஏக வரவேற்பு. Formula -1 கார் ரேஸில் தொடர்ந்து 5-வது முறையாக முதலிடம் பிடித்து இந்திய நாட்டிற்க்கு மேலும் பெருமை சேர்த்தான். அன்று மாலை அவன் மனைவி, "என்னங்க, உங்க வெற்றி நம்ம நாட்டுக்கு மேலும் பெருமை சேர்த்திருக்கு" என்றாள்.
அவன், "Thanks-மா, உன் ஊக்கம்தான் என்னை எப்போதும் மேல கொண்டுட்டு வருது", என்றான். அவள் வெட்கத்துடன் சிரித்துக்கொண்டே, "சரிங்க, உங்க வெற்றிய கொண்டாடுற வகையில நாம இன்னிக்கு ஷாப்பிங்க் போயிட்டு அப்படியே வெளிய டின்னருக்கு போகலாமா??!!" என்றாள்.
"சரி போகலாம், எங்க போகறதுன்னு நீயே சொல்லு", என்றான் உற்சாகத்துடன். அவள், "என்னங்க, வழக்கமா கார்லதான வெளிய போவோம்!!" என்றாள். அவன்,"ஆமாம்!??!", என குழப்பத்துடன் பதிலளித்தான். அவள்,"இன்னிக்கு ஒரு நாள் மட்டும் நாம பைக்ல வெளியே போலாமா!!" என்றாள்.


சட்டென முகம் சிவந்தது அவனுக்கு, "ஒரு Famous Car Racer, Bike ஓட்டீட்டு போனா நல்லாவா இருக்கும்??!!!, அதெல்லாம் ஒன்னும் வேண்டாம், Car-லயே போலாம், போய் கிளம்பு" என்றான். அவள் அந்த கோபத்தை சற்றும் எதிர்பாறாதவளாய், சிறிது நடுக்கத்துடன், "சரிங்க, நான் ரெடியாயிட்டு வரேன்" என உள்ளே சென்றாள்.

உலகின் சிறந்த Car Racer-ஆக இருந்தும், பாவம், அவனுக்கு Bike ஓட்டத்தெரியாது!!!..

முயற்சி செய்!!


முயலாமல் சொல்லாதே முடியாதென்று
முயன்று துணிந்து செயல்படு - பின் உன்
தோல்விகளும் மாறும் ஏணிப்படிகளாய்
அது உன்னை தூக்கி நிறுத்தும்
வெற்றியின் பக்கத்தில்!!!!

கனவுகள் காண்!!

கனவுகள் காண்
கனவை மட்டும் காணாதே
நாளும் நடந்திடு நீ
கண்ட கனவை நனவாக்க
வெற்றி உன் கைகளில்!!!
 


Strive towards your Dreams to make it real..

பாடம்

வகுப்பறை ஆசிரியர் நுழைந்தவுடன் வழக்கம்போல அமைதியானது. ஆசிரியர், "இன்னிக்கு Class Test சொல்லியிருதேனே, எல்லோரும் படிச்சிடிங்களா?" என்றார். வகுப்பறை சிறிது நேரம் அமைதியாக இருந்தது. உடனே ஆசிரியர், "சரி, யாரெல்லாம் படிக்கலயோ, அவங்கல்லாம் எழுந்து நில்லுங்க" என்றார். பயந்தபடியே சில மாணவர்கள் எழுந்து நின்றனர்.


 
உடனே ஆசிரியர் கோபத்தில், "நம்ம ராஜாவைப்பாருங்க, அவன் எப்போதும் நல்லா படிக்கறான்ல, உங்களுக்கு மட்டும் என்னவாம், இன்னக்கி பூரா இப்படியே நில்லுங்க" என்றவர், "இன்னிக்கு Class Test இல்ல, கூட்டாண்மை பாடம் நடத்தப்போறேன். கவனத்த சிதறவிடாம பாடத்த கவனியுங்க", என்றார்.
பாடத்தில் ஒரு பகுதியை ஆசிரியர் விளக்கிக்கொண்டிருந்தார். அப்போது அவர், "இப்போ ஒரு நிறுவனத்தில் ஒரு தொழிலாளி நல்லா வேலை செய்யறார், இன்னொருவர் அவரைவிட கொஞ்சம் மந்தமா வேலை செய்யுறார். அதனால நல்லா வேலை செஞ்சவரை பாராட்டிட்டு, அவர் முன்னாடியே, வேலைல தவறு செஞ்சவரை திட்டக்கூடாது. அப்படி திட்டினா அதுவே அவரது கவனச்சிதறலுக்கு ஆளாக்கிடும், மேலும் தவறுகளுக்கும் வழிவகுக்கும்" என்று கூரியவருக்கு ஏதோ தட்டுப்பட்டு முகத்திலறைந்தாற்போல இருந்தது. உடனே அவர் நின்று கொண்டிருந்த மாணவர்களைப்பார்த்து, "சரி பசங்களா, நின்னது போதும் உட்காருங்க. இனிமே நல்லா படிச்சிட்டு வாங்க, சரியா!!" என்றார்.
மாணவர்களும் சந்தோஷமாக தலையாட்டிவிட்டு அமர்ந்தனர். ஆசிரியர் தன் பாடத்தை தொடர்ந்தார்.

முரண்பாடு


 லாட்டரிச்சீட்டு தடை செய்யப்பட்டு ஒரு மாதமாகிவிட்டது. அன்று காலை நான் வழக்கம்போல ஜாக்கிங் சென்றுகொண்டிருந்தேன். வரும் வழியில் என் நண்பன் ராமு. "டேய்!!, பார்த்து ரொம்ப நாளாச்சே எப்படிடா இருக்க !!" என்றவன், "நம்ம மோகன் வீட்ல இருக்கறவங்க இப்பதாண்டா ரொம்ப சந்தோஷமா இருக்காங்க" என்றான்.
"ஏண்டா!, என்ன விஷயம்!!" என்றேன். ராமு, "மோகனுக்கு ஒரு கெட்ட பழக்கமும் இல்ல, ஆனா சரியான லாட்டரிச்சீட்டு பைத்தியம், வர்ற காசு பாதியும் லாட்டரிச்சீட்டு வாங்கியே செலவு செய்யுறவன். இப்ப லாட்டரி சீட்டை தடை செஞ்சதால பணம் சரியா வீடு போய் சேருது" என்றான்.
அப்படியே பேசிக்கொண்டே நடந்து சென்று கொண்டிருந்தோம். சற்று தொலைவில் ஒரு சிறிய கும்பல். கூட்டத்திற்கிடையே சென்று, "என்ன ஆச்சு!!" என்றேன். கூட்டத்தில் ஒருவர், "லாட்டரி சீட்டு வித்து பொழச்சுகிட்டு இருந்தான். இப்பதான் லாட்டரி சீட்ட தடை பண்னிட்டாங்கல்ல.... அதான் வேற தொழில் செய்யத் தெரியாம தற்கொலை செஞ்சுகிட்டான்" என்றார்.
வாழ்கையில் எத்துனை முரண்பாடுகள் என எண்னியபடியே என் நண்பனுடன் நடையை தொடர்ந்தேன்.