Monday, May 21, 2012

என் நினைவுகள்

 அன்றும் வழக்கம்போல கிண்டியிலிருந்து சேத்துப்பட்டிற்கு ரயில் ஏற காத்திருந்தேன். என் அருகே என் வயதையொத்த ஓர் இளைஞன் பதற்றத்துடன் நின்றிருந்தான். நானும் வேளைக்குச்செல்லும் அவசரத்தில் இருந்தேன். சிக்னல் வந்த சில நேரங்களிலேயே ரயிலும் வந்து சேர்ந்தது. நான் ஏறுவது மதியவேளை என்பதால்  கூட்டம் அவ்வளவு இருக்காது. ரயில் நின்றதும் நான் ஏறச்சென்றேன். நான் கதவருகே சென்றதும் என்னை இடித்துக்கொண்டு அவன் உள்ளே சென்றான். நானும் உள்ளே ஏறி கோபத்தில் அவனிடம், "வண்டி நிக்குதில்ல, கூட்டமும் இல்ல, சீட்டும் நிறைய இருக்கு, அப்புறம் ஏன் சார் என்னை தள்ளிவிட்டுட்டு ஏறறிங்க??"




அவன், "சாரி சார், ரொம்ப அவசரம், ப்ளீஸ் மன்னிச்சிடுங்க?"
அவனது முகத்தை பார்க்க ரொம்ப பாவமாக இருந்தது, நான்,"சரிங்க என்ன அவசரமா இருந்தாலும் பார்த்து வாங்க!!" என்றேன்.
அவன்,"சாரி சார், தாங்க்யூ சார்" என்று சொல்லிவிட்டு சீட்டில் அமர்ந்தான். நானும் அவனை முறைத்துக்கொண்டே எதிரில் இருந்த சீட்டில் அமர்ந்தேன். அவன் மாம்பலம் ரயில் நிலையத்திலேயே, அதே அவசரத்தில் இறங்கி ஓடினான். நான் சலித்துகொண்டே அவன் மறையும்வறை அவனை பார்த்துகொண்டிருந்தேன். அந்த நாளும் வழக்கம்போல கறைந்தது.

இது நடந்து மூன்று நாட்களுக்கு பிறகு, நான் ரயில் ஏறிய பிறகு ஓடும் ரயிலில் அதே அவசரத்துடன் அவன் ஏறினான். நான் அவனை முறைப்பதை பார்த்து அவன் என்னருகே வந்து, "ஹலோ சார்!!, என்னை ஞாபகம் இருக்கா!!" என்றான். "இன்னும் அதே அவசரத்தோடதான் இருக்கிங்க போலிருக்கு" என்றேன். விடையேதும் கூறாமல் என்னைப்பார்த்து சிறித்துக்கொண்டே அவன் சீட்டில் அமர்ந்தான். பின் மாம்பலத்தில் ரயில் நின்றதும், அன்று போல அதே அவசரத்தில் இறங்கி ஓடினான். நான் அவனை எட்டிப்பார்த்து சிரித்தேன்.

பின் சில நாட்களாக அவன், அதே நேரத்தில், நான் செல்லும் அதே ரயிலில் வரத்தொடங்கினான். என்னுடனும் நன்றாக பேசினான். நான் அவனிடத்தில் அவ்வளவாக ஏதும் கேட்கவில்லை, அவனாக தன் பெயர் நாதன் என்றும் கிண்டியில் வேலை செய்வதாகவும் சொன்னான். இந்த நட்பு சிறிது நாள் தொடர்ந்தது. ஒரு நாள் நான் அவனிடம், "ஏன் நீங்க அவ்ளோ அவசரமா அன்னிக்கு வண்டில ஏறினிங்க" என்றேன். "கொஞ்சம் பெர்சனல் சார்" என்றான். நான், "ஓ, சாரி தெரியாம கேட்டுட்டேன்" என்றேன்.

அவன், "பரவால்ல சார், உங்ககிட்ட சொல்றத்துக்கு என்ன, நான் ஒரு பொண்ன ரொம்ப நாளா லவ் பண்னி ஒரு நாள் ப்ரபோஸ் பன்னேன். அப்ப அவங்க அடுத்த நாள் மாம்பலத்துக்கு வர சொன்னாங்க. அன்னிக்குன்னு பாத்து நான் அரைமணி நேரம் லேட். நான் அங்க போகறத்துக்குள்ள அவங்க அங்கிருந்து போயிட்டாங்க." என்றான் சோகத்துடன்.

நான், "அப்புறம் என்ன ஆச்சு சார்" என்றேன். "ம்ம், மாம்பலம் வந்துடுச்சு", என்றான். "என்ன?" என்றேன். "நான் போகனும் சார், கண்டிப்பா மீதியை நாளைக்கு சொல்றேன். ஸ்டேஷனுக்கு சீக்கிறம் வாங்க" என்றான். "அப்ப நாளைக்கும் அரைமணி நேரம் லேட்டா?!!" என்றேன். என்னைப்பார்த்து சிறித்துக்கொண்டே சென்றான்.

ஆனால் அடுத்த நாள் சொன்னபடியே சிறிது நேரத்திற்கு முன்னதாகவே வந்து சேர்ந்தான். "என்ன சார், இதே பங்க்சுவாலிட்டியை அன்னிக்கு மெயிண்டெயின் பண்ணிருக்கலாம்ல!!" என்றேன். அவன் மெலிதாக புண்னகைத்து, "விடுங்க சார், அதான் முடிஞ்சுபோச்சுல்ல" என்றான். நான், "அப்ப லவ் அவுட்டா!!" என்றேன். "சார் நீங்க வேற, அன்னிக்கு அது முடிஞ்சுபோச்சு சார். ஆனா லவ் கண்டின்யூ ஆகுது" என்றான். "புரியலயே!" என்றேன் நான்.

-- Journey to be continued.....

No comments:

Post a Comment