தோன்றி, நான் பின் வளர்ந்து வந்தேன்,
இனி நான் என்ன செய்வேன்;
வீண் வாழ்வும் வாழ்ந்தேதான்
மாய்ந்தும் போவேனோ மண்ணில்..
இறப்பிற்கு பயமில்லை; பயம்தான்
பயனின்றி வாழ்வை வாழ்வதற்கு;
ஏதும் செய்வேனோ இவ்புவியினில்
வாழும் மானுடர்க்கு; என்
முடிவை எட்டும் முன்னால்...
"நான்" என்பதை மறந்தாலே - தானே
யாவும் மாறிடுமோ; இனி
நான் மாறிடுவேன் புதிதாய்;
"நான்" என்பதை மறந்து
மீண்டும் குழந்தையாய் ...
No comments:
Post a Comment