சென்னைக்கு சென்ற முதல் இரண்டு நாட்கள் நான் Bus-ல்தான் சென்று கொண்டிருந்தேன். ஒரு நண்பர், "Passenger Train -ல் சென்று வந்தால் நேரம் மிச்சமாகும், செலவும் குறையும்" என்றார். அவரிடம் எங்கு ரயில் ஏற வேண்டும், எங்கு இறங்க வேண்டும் என விவரமாக கேட்டுக்கொண்டேன்.
பின் வேலை முடிந்து சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் கிண்டிக்கு டிககெட் வாங்கிவிட்டு படியில் ஏறுகையில் கிண்டி செல்லும் ரயில் வந்தது.
நான் ரயிலைப்பிடிக்க அவசரமாக ஓடினேன். ரயில் நின்றவுடன் ஏறமுற்படுகையில் பின்னால் யாரோ தட்டியதுபோல இருந்தது. "இந்த ரயில்லலாம் ஏறக்கூடாது" என்று ஒரு லேடி கான்ஸ்டபிள் தடுத்தார்.
நான், "டிக்கெட், இருக்கு" என்றேன். அந்த லேடி கான்ஸ்டபிள் பேச முயல்வதற்குள், பின்னாலிருந்த சில இளைஞர்கள், "ஊருக்கு புதுசா!" என்றவுடன் நான் "ஆமாம்!!" என்பதுபோல தலையை ஆட்டினேன்.
தங்களுக்குள் சிரித்துக்கொண்ட அவர்கள், "இது கிழவிங்க போற Train தம்பி. பின்னால நம்ம யூத் Train வருது அதுல போலாம் வா!!" என்று என்னை இழுத்துச்செல்லவும், அந்த லேடி கான்ஸ்டபிள் தலையில் அடித்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தார்.
அதன் பிறகுதான் தெரிந்தது அது சென்னையில் பெண்களுக்கென வரும் சிறப்பு ரயிலென்று. பின்னர் நான் அந்த இளைஞர்களுடன் அடுத்து வந்த ரயிலில் ஏறினேன்.
இதை நான் என் நண்பனிடம் சொல்லவும், அவன் விழுந்து விழுந்து சிரித்தான்.
நான் அவனிடம், "அரசியல்ல, இதெல்லாம் சாதாரணமப்பா" என கவுண்டமணி டயலாக் சொல்ல, அவன் சிரிப்பு இரட்டிப்பானது.
"என்ன கொடுமை சார்!!!"
No comments:
Post a Comment